சிந்து நதியில் ரத்த ஆறு ஓடுமா? இந்தியாவுக்கு வரத் தயாரா?: பிலாவல் பூட்டோவுக்கு ஒன்றிய அமைச்சர் கேள்வி
இதற்கெல்லாம் நாங்கள் பயப்படுவோமா? நான் அவரிடம் (பூட்டோ) சொல்கிறேன். சகோதரரே, உங்களுக்கு கொஞ்சம் தைரியம் இருந்தால், இங்கே வாருங்கள். இதுபோன்ற பேச்சுக்களைப் பற்றி கவலைப்படாமல், தண்ணீரை சேமிப்பது நமது பொறுப்பு’ என்று கூறினார். இன்னொரு ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ‘ பிலாவல் பூட்டோ மன நிலையைப் பரிசோதிக்கச் சொல்லுங்கள், என்ன மாதிரியான அறிக்கைகளை அவர் கொடுக்கிறார். போதும்... இதை இனி பொறுத்துக் கொள்ள மாட்டோம். இப்போது சில நாட்கள் பொறுங்கள்’ என்றார். காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் கூறுகையில்,’ பிலாவல் கருத்து அதிர்ச்சிகரமானது. இந்தியர்களை யாரும் கொல்ல முடியாது என்பதை பாகிஸ்தானியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஏதாவது செய்தால், பதிலடிக்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும். ரத்தம் ஓடினால், அது நம்மை விட அவர்களின் பக்கமே அதிகமாக பாயும்’ என்று கூறினார்.