இந்தோனேஷியாவில் வெள்ளம், நிலச்சரிவில் இறந்தோர் எண்ணிக்கை 279ஆக அதிகரிப்பு
ஆகம்: இந்தோனேஷியாவில் கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. வடக்கு சுமத்ரா மாகாணத்தின் சில பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
Advertisement
தகவல் தொடர்பு இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டன. வடக்கு சுமத்ராவில் மீட்பு பணியாளர்கள் நேற்று மேலும் 31 சடலங்களை மீட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கையானது 279ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணாமல் போன 174 பேரை தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. டிசம்பர் 11ம் தேதி வரை இங்கு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement