பனாஜி: கோவாவின் மொபா விமான நிலையத்திலிருந்து நேற்று காலை 9.20 மணிக்கு இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று 229 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் ஒரு இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், விமானம் உடனடியாக கோவாவுக்குத் திரும்பியது. பின்னர் மனோகர் சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் பிற்பகலில் மற்றொரு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
+
Advertisement



