லக்னோ: லக்னோவில் சையது மோடி சர்வதேச பேட்மின்டன் தொடர் நடைபெற்று வந்தது. இதில் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி ஜப்பானின் மை தனபே, கஹோ ஒசாவா ஜோடியை எதிர்த்து மோதியது. ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் ட்ரீசா, காயத்ரி ஜோடி 17-21, 21-13, 21-15 என்ற செட் கணக்கில் ஜப்பான் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது. ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி காந்த், ஹாங் காங்கின் ஜேசன் குனவானுடன் மோதினார். இதில் காந்த் 16-21, 21-8, 20-22 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
+
Advertisement

