தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!..

சவுத்தாம்டன்: இந்திய அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய அணியுடனான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில், இங்கிலாந்து 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 257 ரன் குவித்தது. இந்தியா இங்கிலாந்து அணிகளிடையே மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், அடுத்து நடந்த 3 போட்டியிலும் இங்கிலாந்து அபாரமாக வென்று 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

Advertisement

இந்த நிலையில், 5வது மற்றும் கடைசி போட்டி சவுத்தாம்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்று நடந்தது. டிராபிக்கால் தாமதம்: இந்திய அணி வீரர்கள் பயணம் செய்த பேருந்து கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், டாஸ் போடுவதற்கான நேரம் கடந்து 5 நிமிடத்திற்கு பிறகே அரங்கிற்குள் நுழைந்தது. இதனால் சுமார் 45 நிமிடம் தாமதமாகவே டாஸ் போடப்பட்டது. அதில் வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஃபில் சால்ட், ஜோஸ் பட்லர் இணைந்து இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கினர்.

சால்ட் 6 ரன் மட்டுமே எடுத்து பிரசித் பந்துவீச்சில் சூர்யன்ஷ் ஷெட்கே வசம் பிடிபட்டார். பட்லர் புரூக் அதிரடி: அடுத்து பட்லருடன் கேப்டன் ஹாரி புரூக் ஜோடி சேர்ந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி ரன் குவிக்க, இங்கிலாந்து ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. புரூக் 19 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடிக்க, பட்லர் 34 பந்தில் 50 ரன்னை எட்டினார். அதன் பிறகு டாப் கியரில் எகிறிய பட்லர் புரூக்கை ஓவர்டேக் செய்து 51 பந்தில் சதத்தை நிறைவு செய்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 233 ரன் சேர்த்து மிரட்டியது.

பட்லர் 131 ரன் (64 பந்து 12 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசி ஷிவம் துபே பந்துவீச்சில் ஷ்ரேயாஸ் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த பெத்தெல் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 257 ரன் குவித்தது. ஹாரி புரூக் 95 ரன் (45 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்), வில் ஜாக்ஸ் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 258 ரன் எடுத்தால் ஆறுதல் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

Related News