நியூ சண்டிகர்: இந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 48.2 ஓவர்களீல் 5 விக்கெட்டுகள் இழந்து 352 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 162* ரன்களும், அமீர் ஜங்கு 67 ரன்களும் எடுத்தனர். இந்நிலையில் இந்திய அணி 2:1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
+
Advertisement


