தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய அரிசிக்கு புதிய வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு

வாஷிங்டன்: இந்திய அரிசி மற்றும் கனடா நாட்டு உரங்களுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்ற டிரம்ப், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்கா இனி அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வருவதுடன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு உச்சபட்ச வரியை அறிவித்துள்ளார்.

Advertisement

அமெரிக்காவின் வரிவிதிப்பால், அந்நாட்டை சார்ந்து வணிகம் மேற்கொண்டு வரும் இந்திய முதலீட்டாளர்கள் பாதிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது. இருநாடுகள் இடையேயான வர்த்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் இல்லாத நிலையில், இந்திய அரிசி மற்றும் கனடா நாட்டு உரங்களுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

குறிப்பாக, விவசாய பொருட்களின் இறக்குமதிகள், குறிப்பாக கனடாவில் இருந்து இறக்குமதியாகும் உரங்கள் மீது புதிய வரிகளை அறிமுகப்படுத்த உள்ளார். அமெரிக்க விவசாயிகளுக்கான 12 பில்லியன் நிதி உதவியை அறிவிப்பது தொடர்பாக வெள்ளை மாளிகையில் கூட்டம் நடைபெற்றது.

அப்போது,மானிய விலையில் அரிசியை இறக்குமதி செய்வது அமெரிக்க சந்தைகளை பாதிக்கிறது. இதனால் உள்நாட்டு விலையில் பாதிப்பு காணப்படுகிறது, எனவே கடுமையான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும், இந்தியா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளினால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது; இந்தியாவிலிருந்து அதிக அரிசி இறக்குமதி செய்வதால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்படுவதாக டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார். குறைந்த விலையில் அமெரிக்க சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் உள் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சவாலாக உள்ளது. பெரும்பாலான உரங்கள் கனடாவில் இருந்து இங்கே வருகின்றன. எனவே தேவைப்பட்டால் அவற்றின் மீது கடுமையான வரிகளை விதிப்போம். நீங்கள் என்னிடம் வலியுறுத்த விரும்புவதும் இதுதான். அதை இங்கே செய்ய முடியும். இவ்வாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

 

Advertisement

Related News