மும்பை: அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கின்றனர். மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2,100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வரதமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தையில் 79 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
சென்செக்ஸ் 2165 புள்ளிகள் உயர்ந்து 79465 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் ஒரே நாளில் 2.7 சதவீதம் உயர்வுதேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 600 புள்ளிகள் உயர்வை சந்தித்திருக்கிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 619 புள்ளிகள் உயர்ந்து 24,580 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2 மாதங்களில் இல்லாத அளவு கடும் சரிவை சந்தித்திருக்கிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்கி குவிப்பதால் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வை சந்தித்திருக்கின்றன. 2 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்ததால் பங்குச்சந்தையில் அதிக முதலீடுகள் போடப்படுகிறது.


