இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 85 இடங்கள்
இந்திய விண்வெளி மையத்தின் கீழ் இயங்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. டெக்னீசியன் ‘பி’:
i) கெமிக்கல்: 13 இடங்கள் (பொது-8, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-2). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கெமிக்கல் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) எலக்ட்ரீசியன்: 8 இடங்கள் (பொது-4, ஒபிசி-3, எஸ்டி-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iii) பிட்டர்: 21 இடங்கள் (பொது-11, ஒபிசி-6, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iv) சிவில் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட்: 4 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சிவில் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட்டில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
v) ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர் கண்டிஷனிங்: 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-2, எஸ்டி-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
vi) பம்ப் ஆபரேட்டர் மற்றும் மெக்கானிக்: 1 இடம் (எஸ்டி). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பம்ப் ஆபரேட்டர் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
vii) போட்டோகிராபி/டிஜிட்டல் போட்டோகிராபி: 1 இடம் (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் போட்டோகிராபி/டிஜிட்டல் போட்டோகிராபியில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
viii) எலக்ட்ரானிக் மெக்கானிக்: 12 இடங்கள் (பொது-6, ஒபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக் மெக்கானிக் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ix) பாய்லர் அட்டெண்டென்ட்: 2 இடங்கள் (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பாய்லர் அட்டெண்டென்ட் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
x) டீசல் மெக்கானிக்: 1 இடம் (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டீசல் மெக்கானிக் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
xi) இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்: 1 இடம் (பொது) தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்கில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
xii) கம்ப்யூட்டர் சயின்ஸ்: 1 இடம் (ஒபிசி). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்பர்மேஷன் மற்றும் கம்யூனிகேஷன் டெக்னாலஜி/சிஸ்டம் மெயின்டெனன்ஸ் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான சம்பளம்: ரூ.21,700- 69,100.
2. டிராப்ட்ஸ்மேன் ‘பி’: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). சம்பளம்: ரூ.21,700- ரூ.69,100. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டிராப்ட்ஸ்மேன் (சிவில்) பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. சமையலர்: 3 இடங்கள் (பொது-2, எஸ்சி-1). சம்பளம்: ரூ.19,900- 63,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பயர்மேன் ‘ஏ’: 6 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.19,900- 63,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் நல்ல உடற்தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.
5. லைட் வெஹிக்கிள் டிரைவர் ‘ஏ’: 3 இடங்கள் (பொது-2, எஸ்சி-1). சம்பளம்: ரூ.19,900- 63,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
6. நர்ஸ் ‘பி’: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.44,900- 1,42,400. தகுதி: நர்சிங் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சியுடன் மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி எண் 1,2,3 மற்றும் 5க்கான வயது வரம்பு 18 லிருந்து 35க்குள் இருக்க வேண்டும். பணி எண்: 4க்கான வயது வரம்பு 18 லிருந்து 25க்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ளும் எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் திருப்பித் தரப்படும்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.https://www.apps.shar.gov.in என்றள இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.