Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய தகவல் தொழில் நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் பணி

குரூப் ஏ மற்றும் பி பணியிடங்கள்

1. டெக்னிக்கல் ஆபீசர்: 2 இடங்கள் (பொது). வயது: 45க்குள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மற்றும் தொடர்புடைய இன்ஜினியரிங் படிப்புகளில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,/எம்எஸ்சி/எம்சிஏ மற்றும் 8 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது எம்இ.,/எம்டெக்., மற்றும் 5 ஆண்டுகள் முன்அனுபவம்.

2. உதவி பதிவாளர்: 1 இடம் (பொது). வயது: 45க்குள். தகுதி: 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் முன்அனுபவம்.

3. இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர்: 2 இடங்கள் (ஒபிசி-1, பொது-1). வயது: 32க்குள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது மெக்கானிக்கல் இ்ன்ஜினியரிங் மற்றும் தொடர்புடைய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் 5 ஆண்டுகள் முன்அனுபவம்.

4. இளநிலை கண்காணிப்பாளர்: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1) தகுதி: 55% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் நிர்வாகம்/ அக்கவுன்ட்ஸ்/அகடமிக்ஸ்/ஸ்டோர்ஸ் மற்றும் பர்ச்சேஸ் ஆகிய பிரிவுகளில் 6 ஆண்டுகள் முன்அனுபவம்.

5. ஸ்டாப் நர்ஸ்: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). வயது: 32க்குள். தகுதி: பிஎஸ்சி நர்சிங் மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது 60% மதிப்பெண்களுடன் நர்சரி மிட்வொய்பரி பாடத்தில் தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் முன்அனுபவம்.

6. உடற்பயிற்சி ஆசிரியர்: 1 இடம் (பொது). வயது: 32க்குள். தகுதி: 60% மதிப்பெண்களுடன் பி.பிஎட் மற்றும் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.குரூப் சி பணியிடங்கள்

7. ஜூனியர் டெக்னீசியன்: 1 இடம் (எஸ்டி). வயது: 27க்குள். தகுதி: 60% மதிப்பெண்களுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மற்றும் தொடர்புடைய பாடங்களில் பி.இ.,/டிப்ளமோ/ஐடிஐ மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.

8. ஜூனியர் டெக்னீசியன்: 1 இடம் (எஸ்டி). வயது: 27க்குள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது அதன் தொடர்புடைய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/டிப்ளமோ/ஐடிஐ மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம்

9. ஜூனியர் டெக்னீசியன்: 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 27க்குள். தகுதி: 60% மதிப்பெண்களுடன் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/ டிப்ளமோ/ஐடிஐ மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.

10. ஜூனியர் டெக்னீசியன்: 1 இடம் (பொது). வயது: 27க்குள். தகுதி: 60% மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பாடங்களில் பி.இ.,/டிப்ளமோ/ஐடிஐ மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.

11. ஜூனியர் அசிஸ்டென்ட்: 2 இடங்கள் (ஒபிசி-1, பொது-1). தகுதி: 55% மதிப்பெண்களுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பிஎஸ்சி.,

https://iiitk.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.01.2026.