Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 2757 அப்ரன்டிஸ்கள்

பயிற்சிகள் விவரம்:

1. டிரேடு அப்ரன்டிஸ்:

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள டிரேடுகள்: பிட்டர், மெக்கானிக்கல், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (சமீபத்தில் படிப்பை முடித்தவர்கள்), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (ஸ்கில்டு).

தகுதி பிட்டர்/மெக்கானிக்கல் பிரிவுக்கு: அ. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர்/மெக்கானிக்கல் டிரேடில் 2 வருட ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். ஐடிஐ படிப்பானது என்சிவிடி அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.

ஆ. டெக்னீசியன் அப்ரன்டிஸ்:

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள் விவரம்: கெமிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்.

தகுதி: சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இ. டிரேடு அப்ரன்டிஸ் (கிராஜூவேட்):

தகுதி: கெமிக்கல் பிளான்ட் ஆபரேட்டர்: இப் பயிற்சிக்கு கணிதம்/இயற்பியல்/வேதியியல்/இன்டஸ்ட்ரியல் கெமிஸ்டிரி ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஈ. அக்கவுன்டென்ட்: பி.காம்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உ. செக்ரடேட்டரியேட் அசிஸ்டென்ட்: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் உதவித் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், சான்றிதழ் சரி பார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் டிரேடு அப்ரன்டிஸ் பயிற்சிக்கு www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், டெக்னீசியன் அப்ரன்டிஸ் மற்றும் கிராஜூவேட் அப்ரன்டிஸ் பயிற்சிகளுக்கு www.nata.education.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (18.12.2025).