நார்டான் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம், இந்தியச் சந்தையில் மேன்க்ஸ் ஆர் என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம், கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த மிலன் மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் இந்த பைக்கை முதன் முதலாக காட்சிப்படுத்தியிருந்தது. இதில் 1,200 சிசி லிக்விட் கூல்டு வி4 மோட்டார் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 11,500 ஆர்பிஎம்-ல் 203 பிஎச்பி பவரையும், 9,000 ஆர்பிஎம்-ல் 130 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 8 அங்குல டிஎப்டி டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. ஸ்மார்ட் போன் இணைப்பு, 3 ரைடிங் மோடுகள், இருபுறமும் இயங்கும் குயிக் ஷிப்டர்கள் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பைக்கிற்கான காப்புரிமையை இந்தியாவில் இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது. இதன்மூலம், நடப்பு ஆண்டு இறுதிக்குள் இந்த பைக் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
+


