Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட் : பெண்கள் விண்ணப்பிக்கலாம்

மொத்த காலியிடங்கள்: 31. பொறியியல் பாட வாரியாக காலியிடங்கள் விவரம்: ( சிவில்-7, கம்ப்யூட்டர் சயின்ஸ்-4, எலக்ட்ரிக்கல்-3, எலக்ட்ரானிக்ஸ்-6, மெக்கானிக்கல்-9, இன்ஜினியரிங் அல்லாத பிரிவு-2.

தகுதி: சிவில்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/மெக்கானிக்கல்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி/டெலிகம்யூனிகேஷன்/அவியோனிக்ஸ்/ ஏரோநாட்டிக்கல்/ஏரோஸ்பேஸ்/ இன்ஸ்ட்ருமென்டேஷன்/கம்ப்யூட்டர் டெக்னாலஜி/ கன்ஸ்டிரக்ஷன் இன்ஜினியரிங்/ஜியோ இன்பர்மேட்டிக்ஸ்/ ரூரல் சிவில் இன்ஜினியரிங்/என்விரோன்மென்டல் இன்ஜினியரிங்/நானோ டெக்னாலஜி/ஆர்ட்டிபிஷியல் இன்ஜினியரிங்/ மிஷின் லெர்னிங்/ ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக்ஸ்/ சாப்ட்வேர் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது: 01.10.2026 தேதியின்படி 20 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500.

உடற்தகுதி: 2.4 கி.மீ., தூரத்தை 13 நிமிடங்கள் 30 வினாடிகளுக்குள் ஓடி முடிக்க வேண்டும். 15 புஷ்அப்கள், 25 சிட்அப்கள், 2 புல்அப்கள், ஸ்குவாட்ஸ், லங்கஸ், நீச்சல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள், எஸ்எஸ்பியால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு 49 வாரங்கள் பயிற்சி வழங்கப்படும்.டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் 2026 அக்டோபர் முதல் பயிற்சி தொடங்கும். இதை வெற்றிகரமாக முடிப்பவர்கள் இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட்டாக பணியமர்த்தப்படுவர். www.indianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.02.2026.