பணி: லெப்டினென்ட் (என்சிசி- ஸ்பெஷல் என்ட்ரி)- 124வது கோர்ஸ்.
மொத்த காலியிடங்கள்: 70. இதில் 7 இடங்கள் போரில் இறந்த ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500. வயது: 01.07.2026 தேதியின்படி 19 முதல் 25க்குள்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று என்சிசி தேர்வில் குறைந்தபட்சம் ‘பி’ கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்சிசியில் 2 வருடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
ேபாரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான தகுதி: இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்சிசி சான்றிதழ் தேவையில்லை. ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான காலியிடத்திற்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
உடற்தகுதி: உயரம்- 157 செ.மீ., உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும்.
உடற்திறன் தேர்வு: 2.4 கி.மீ., 10.30 நிமிடத்திற்குள் ஓடிக் கடக்க வேண்டும். சிட்அப்ஸ்-6, புஷ்அப்ஸ்-30, புல்அப்ஸ்-40 எடுத்தல் மற்றும் ஸ்குவாட்ஸ் லங்க்ஸ் பயிற்சியில் வெற்றி பெற வேண்டும். மேலும் 25 மீட்டர் நீந்துதல், கயிறு ஏறுதல் ஆகிய உடற்திறன் சோதனைகளிலும் வெற்றி பெற வேண்டும்.
உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
வருகிற அக்டோபரில் எஸ்எஸ்பி தேர்வு நடைபெறும். அதன்பின்னர் நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் இ.மெயிலில் அனுப்பி வைக்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஏசி-3 டயர் ரயில்/பஸ் கட்டணம் வழங்கப்படும்.
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சென்னையிலுள்ள ஆபீசர் டிரெய்னிங் அகடமியில் 49 வாரங்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தால் பட்டம் வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் லெப்டினென்ட் பணி வழங்கப்படும்.விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.03.2026.
