Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நேபாளத்தில் வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்களுடன் இந்தியத் தூதர் சந்திப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்களை இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா சந்தித்துள்ளார். காத்மாண்டு அழைத்துவரப்பட்டவர்களை வசதிகள் குறித்து கேட்டறிந்தார் இந்தியத் தூதர்.

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 106 தமிழர்களில் 21 பேர் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். நேபாளில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ஆன்மீக சுற்றுலாவிற்காக சென்ற போது வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டு முகாமில் தங்கவைத்துள்ளதாக நேபாள அரசு தெரிவித்ததையடுத்து இந்திய தூதர் நேரில் சென்று அவர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை பற்றி கேட்டறிந்துள்ளார்.

இந்தியாவில் இருந்து மீட்பு மற்றும் உதவி பொருட்களை இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் அனுப்பட்ட நிலையில் தற்போது மீட்பு பணியில் உதவிகளையும் இந்திய வழங்கி வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் மீட்கப்பட்டவர்கள் டெல்லிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதற்காக இந்தியாவின் சி 70 குளோபல் மாஸ்டர் விமானம் அவர்களை அங்கிருந்து இந்திய அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 48 மணி நேரம் கடந்தும் 85 தமிழர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை நீடிக்கிறது.