Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

2 மாத இடைவௌிக்கு பிறகு இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதியை மீண்டும் தொடங்கிய நேபாளம்

காத்மண்டு: 2 மாதங்களுக்கு பிறகு இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதியை நேபாளம் மீண்டும் தொடங்கி உள்ளது.  நேபாளத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைக்கு இந்தியா ஒரு முக்கிய சந்தையாக உள்ளது. இந்த சூழலில் கடந்த மே 1ம் தேதி, இந்திய தேயிலை வாரியம், புதிய தரக்கட்டுப்பாட்டு விதிகளின்படி, நேபாளத்தில் இருந்து வரும் அனைத்து தேயிலை சரக்குகளுக்கும் 100 சதவீத கட்டாய ஆய்வை அறிமுகப்படுத்தியது.

ஆனால், நேபாளத்தில் சர்வதேச தரத்திலான ஆய்வங்கள் இல்லாத காரணத்தால் மேற்குவங்கத்தின் கொல்கத்தாவுக்கு தேயிலை மாதிரிகளை அனுப்பி சோதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் எல்லையில் தேயிலை லாரிகள் தடைப்பட்டது. மேலும், நேபாளத்தில் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதியை செய்வதற்கான விதிமுறைகளை தளர்த்த நேபாள அரசு முயற்சிகளை எடுத்து வந்தது. அதன்படி நேபாள தேயிலைகளை இறக்குமதி செய்வதற்கான கொள்கைகளை இந்தியா மறுஆய்வு செய்தது. இதனால் நேற்று முன்தினம் முதல் நேபாளத்தில் இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதி மீண்டும் தொடங்கி உள்ளது. இந்த தகவலை நேபாள வௌியுறவு அமைச்சர் சிசிர் கனால் தெரிவித்துள்ளார்.