கொழும்பு: இந்தியா இலங்கை அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் (எஸ்எஸ்சி) மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலே சர்வதேச அரங்கில் நடந்த முதல் டெஸ்டில், இந்தியா 165 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
அந்த போட்டியில் படிக்கல், ராகுல், ஜுரெல், பன்ட் ஆகியோர் ரன் குவிப்பில் சிறப்பாக செயல்பட்ட நிலையில், சுழற்பந்துவீச்சாளர்கள் மானவ் சுதர், ஜடேஜா பந்துவீச்சில் அசத்தினர். இலங்கை தரப்பில் சோனல் தினுஷா, டிக்வெல்லா, கேப்டன் தனஞ்ஜெயா ஆகியோர் பேட்டிங்கில் அசத்த… அசிதா, பிரபாத், லாகிரு, நுவந்தா பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தது.
இந்த நிலையில், இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க 2வது டெஸ்ட் கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் தொடரைக் கைப்பற்ற இந்திய அணியும், பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய இலங்கையும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.



