தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவின் வளர்ச்சிக்கு, நாங்கள் தோளோடு தோளாக துணை நின்றதில் பெருமைப்படுகிறோம்: ரஷ்ய அதிபர் மாளிகை

மாஸ்கோ: டிச.4 ம் தேதி ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வர உள்ள நிலையில், இருநாட்டு உறவுகள் குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ரஷ்யா -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக என்று கூறி ரஷ்யாவிடம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்தார். இதனையடுத்து இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை சமீபத்தில் குறைத்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வருகிற 4ம் தேதி இந்தியா வருகின்றார்.

Advertisement

ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வர உள்ள நிலையில், இருநாட்டு உறவுகள் குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்; இந்திய-ரஷ்ய உறவு என்பது வெறும் ராஜாங்க ரீதியில் மட்டுமல்ல, அதில் ஆழமான வரலாற்று பின்னணி உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு, நாங்கள் தோளோடு தோளாக துணை நின்றதில் பெருமைப்படுகிறோம். இன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் நட்புரீதியான நிலைப்பாடுகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மந்துரோவ் கூறுகையில்; ரஷ்ய அதிபர் புதினின் இந்திய பயணம் இருதரப்புக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும். இந்திய ரஷ்ய உறவு நெருக்கமாக உள்ள நிலையில், இருநாட்டு தலைவர்களும் தனிப்பட்ட பிணைப்பை கொண்டிருப்பதாக மந்துரோவ் குறிப்பிட்டார். அத்துடன் பல இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் கல்வி பயில்வதாகவும், அவர்களில் 14 ஆயிரம் பேர் மருத்துவம் பயில்வதாகவும் தெரிவித்த அவர், இந்தியா ரஷ்யா இடையே வர்த்தகம் மட்டுமல்லாது கல்வி, வணிகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் விரிவடைந்து வருவதாக குறிப்பிட்டார்.

Advertisement