Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரன்கள் குவித்த இந்தியா... ஆட்டத்தை முடித்து வைத்த மழை! இங்கிலாந்து டி20 தொடரின் முதல் போட்டி கைவிடப்பட்டது

செஸ்டர் லீ ஸ்ட்ரீட்: செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரில் இந்தியா-இங்கிலாந்து இடையே நடந்த முதல் டி-20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. ரிவர்சைடு மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. வைபவ் சூரியவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சாம்சன் (1), இஷான் (0 ரன் அவுட்) ஏமாற்றமளித்த நிலையில், அபிஷேக் அதிரடியாக அரை சதம் விளாசி அசத்தினார். அபிஷேக் - ஷ்ரேயாஸ் 3வது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்தனர். அபிஷேக் 59 ரன் (24 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), திலக் 13 ரன்னில் வெளியேறினர். ஷ்ரேயஸ் 68 ரன் (47 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாச, ஹர்ஷித் டக் அவுட்டானார்.

கடைசி பந்தில் அக்சர் (3) ரன் அவுட்டாக… இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. துபே 42 ரன்னுடன் (21 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் சகிப் மகமூத் 3, சாம் கரன், அடில் ரஷித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியாவின் இன்னிங்ஸ் முடியும் தருவாயில் மழை பெய்யத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 20 ஓவரில் 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

மழை மேலும் தீவிரமடைந்தது. 5 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தை நடத்துவதற்கான காலக்கெடு முடிவதற்கு 40 நிமிடங்களுக்கும் சற்று குறைவான நேரமே இருந்த நிலையில், நடுவர்கள் ஆட்டத்தைக் கைவிடுவதாக முடிவு செய்தனர். பின்னர் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடர முடியாத அளவிற்கு மழை பெய்ததால் போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டது.