Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஈரான் எண்ணெய் கடத்தலுக்கு ரகசிய உதவி: 9 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா அதிரடி பொருளாதார தடை..

மும்பை: ஈரானின் ரகசிய எண்ணெய் வர்த்தகத்திற்கு உதவி செய்ததாக, இந்திய நிறுவனங்கள், தனி நபர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. 9 நிறுவனங்கள், 4 தனிநபர்கள் மீது இந்த தடையை அமெரிக்கா விதித்துள்ளது.

அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது. ஓசியானிக் டெக்னாலஜிஸ் இந்தியா, ஆர்யாவர்த் ஷிப் மேனேஜ்மென்ட், அலெக்ஸாரியா ஃபின்செர்வ் பிரைவேட் லிமிடெட், சமுத்ரா மேரைன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்.எஸ்.பி.எல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு இந்த தடை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர சுனில் குமார் சர்மா மற்றும் அவரது மனைவி ஜஸ்பிரீத் ப்ரீத்தி ஷாஹித், அஸ்வானி குமார் திமான் மற்றும் இஷ்விந்தர் சிங் ஆகியோர் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கா இந்த இந்திய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது தடை விதித்ததற்கான மிக முக்கியக் காரணம், ஈரான் மீதான சர்வதேச எண்ணெய் கட்டுப்பாடுகளை ஏமாற்றி, அந்நாட்டின் கச்சா எண்ணெயைக் கடத்த உதவியதாகும்.

சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஈரானிய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் யாருக்கும் தெரியாமல் கடலில் இயங்க இவர்கள் உதவினர். இதற்காகப் போலி இணையதளங்களை உருவாக்கி, அந்தக் கப்பல்களுக்குப் போலிப் பதிவுகள், போலி சர்வதேசக் கொடிகள் மற்றும் போலி கடல்சார் பாதுகாப்புச் சான்றிதழ்களை வழங்கி உள்ளந்தக் அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.