Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரிவாள் செல் ரத்த சோகை சிகிச்சைக்கான மருந்து கண்டுபிடித்தால் ரூ.10 கோடி பரிசு: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: அரிவாள் செல் நோய் என்பது அரிவாள் செல் ரத்த சோகை என்றும் அழைக்கப்படுகிறது.அரிவாள் வடிவ செல்கள் ரத்த நாளங்களில் எளிதில் பயணிக்க முடியாமல் சிக்கிக் கொள்வதால், ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இது பக்கவாதம், கண் பிரச்னைகள் உள்பட பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், உலக அரிவாள் செல் நோய்க்கான தின நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு பேசிய ஒன்றிய பழங்குடி இன விவகாரங்கள் துறை அமைச்சர் துர்காதாஸ் உய்கே,‘‘இந்த நோய்க்கான சிகிச்சைக்கு தற்போது ஒரே ஒரு மருந்து மட்டுமே உள்ளது.

நோயாளியின் உடல் நிலை மற்றும் நோயின் தீவிரத்தின் அடிப்படையில் மாற்று மருந்துகளை தேர்ந்தெடுக்க எந்த வழியும் இல்லை. இந்த நோய்க்கான புதிய மருந்தை உருவாக்குவது தொடர்பாக பழங்குடி விவகார அமைச்சகம் மற்றும் டெல்லி எய்ம்ஸ் இணைந்து போட்டி நடத்தப்படும். இதில் சிறந்ததாக தேர்வு செய்யப்படும் மருந்துக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும்’’ என்றார்.