திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.3.08 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றுமுன்தினம் 59,231 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 22,029 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
கோயில் உண்டியலில் ரூ.3.08 கோடி காணிக்கை செலுத்தினர். நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 9 அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

