Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பதியில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்: அலிபிரி சோதனை சாவடியில் அணிவகுத்த வாகனங்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று சனிக்கிழமை, இன்று ஞாயிற்றுக்கிழமை என வார விடுமுறை நாட்கள் என்பதால் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. அதன்படி நேற்று இலவச தரிசனத்தில், வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதால் சிலாதோரணம் வரை 3 கிலோ மீட்டர் வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால் இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்களை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் 5 மணி நேரமும், திருப்பதியில் வழங்கப்படும் இலவச சர்வ தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் அலிபிரி மலைப்பாதையில் வேண்டுதலின்படி பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது. அலிபிரி சோதனை சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து காத்திருப்பதால் நீண்ட நேர சோதனைக்கு பிறகு திருமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.