பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் மற்றும் முன்னாள் மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான எஸ்.எம்.கிருஷ்ணா உடல்நல குறைவு காரணமாக நேற்று முன்தினம் அதிகாலை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அதை தொடர்ந்து நேற்று காலை மண்டியா மாவட்டம், மத்தூர் தாலுகாவில் உள்ள சோமனஹள்ளி கிராமத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் மண்டியா மாவட்ட போலீசார் மூன்று சுற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. 1000 கிலோ சந்தன கட்டைகளால் அவரது உடல் மூடப்பட்டது. அவரது உடலுக்கு மகள் வழி பேரனும் துணைமுதல்வர் டி.கே.சிவகுமாரின் மருமகனுமான அமர்த்தியா மாலை 5.23 மணிக்கு தீ மூட்டினார். எஸ்.எம்.கிருஷ்ணா மறைவையொட்டி நேற்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement


