Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பணியிடத்தில் திட்டிய மூத்த அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: பணியிடத்தில் மூத்த அதிகாரி திட்டியதற்காக அவர் மீது கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களின் அதிகாரமளிப்புக்கான தேசிய நிறுவனத்தில் இயக்குனராக உள்ள அதிகாரியை பற்றி உதவி பேராசிரியர் ஒருவர் உயர் அதிகாரிகளிடம் கடந்த 2022ல் புகார் அளித்திருந்தார்.இது சம்பந்தமாக நிறுவனத்தின் இயக்குனர் அனைவரின் முன்னிலையில் உதவி பேராசிரியரை திட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரக்கோரி உதவி பேராசிரியர் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,தலைமை பொறுப்பில் இருப்பவர் தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களின் தொழில்முறை கடமைகளை மிகுந்த நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்ய வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பு ஆகும்.

இது வேண்டுமென்றே, செய்த அவமதிப்பாக கருத முடியாது. இதுபோன்ற வழக்குகளில் தனிநபர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்த அனுமதிப்பது பேரழிவு தரும் விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

பணியிடத்தில் தேவைப்படும் முழு ஒழுங்குமுறை சூழலையும் முடக்கிவிடும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.