Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.7.5 லட்சம் கோடி கடன் வாங்க ஒன்றிய அரசு திட்டம்

புதுடெல்லி: பொருளாதார வளர்ச்சியை பெருக்கவும், வருவாய் இடைவெளியை சமாளிக்கவும் 2024-25ம் நிதியாண்டின் முதல் பாதியில் அரசு கடன் பத்திரங்கள் மூலம் ரூ.7.5 லட்சம் கோடி நிதி திரட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘2024-25ம் நிதியாண்டில் பங்குச்சந்தையில் அரசு கடன் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.14.13 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. இதில், 53 சதவீதமான ரூ.7.5 லட்சம் கோடி வரும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் மொத்த கடன் மதிப்பீடான ரூ.15.43 லட்சம் கோடியை விட குறைவாகும்’ என கூறப்பட்டுள்ளது.