Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மழை எதிரொலி ஜம்முவில் அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

ஸ்ரீநகர்: மழை காரணமாக ஜம்முவில் இருந்து அமர்நாத் யாத்திரை செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரையானது ஜூலை 3ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றது. இதுவரை 3.93லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இதனிடையே மோசமான வானிலை காரணமாக அவ்வப்போது அமர்நாத் யாத்திரை நிறுத்தப்படுகின்றது. வானிலை சீரானதும் பக்தர்கள் யாத்திரையை தொடர அனுமதிக்கப்பட்டு வருகின்றது. பால்டாலில் இருந்து பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டுச்சென்றனர். ஆனால் மழை காரணமாக ஜம்முவில் இருந்து யாத்திரை செல்வது நிறுத்தப்பட்டது. பக்தர்கள் நேற்று காலை யாத்திரைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.