மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஸ்ரீநகர் சென்றார். காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை அவரது இல்லத்திலும், துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை ஆளுநர் மாளிகையிலும் சந்தித்தார். அப்போது அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குலாம் அகமது மிர், தாரிக் ஹமீது கரா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் சையது நசீர் ஹுசைன் ஆகியோர் இருந்தனர். தொடர்ந்து ஸ்ரீநகர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காயமடைந்தவர்களையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் ராகுல் காந்தி சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,’ இது ஒரு பயங்கரமான சோகம். என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளவும், உதவி செய்வதற்காகவும் நான் இங்கே வந்துள்ளேன். ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் மக்களும் இந்த தாக்குதலைக் கண்டித்ததுடன், இந்த நேரத்தில் தேசத்துடன் ஒற்றுமையாக நின்றுள்ளனர். அதை தொடர்ந்து காஷ்மீர் வணிகர்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் சுற்றுலா தொடர்பான பிரதிநிதிகளை ராகுல்காந்தி சந்தித்து பேசினார்.


