Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெங்கய்யா நாயுடுவின் வாழ்க்கை வரலாறு நூல்கள் வெளியீடு

ஐதராபாத்: துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தனது 75வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி வெங்கய்யா நாயுடுவின் வாழ்க்கை வரலாறு குறித்த 3 நூல்கள் நேற்று வௌியிடப்பட்டன. ஐதராபாத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு நூல்களை வௌியிட்டார். அப்போது பேசிய மோடி, “வெங்கய்யா நாயுடுவின் வாழ்க்கை வரலாறு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும். அவரிடம் இருந்து பல்வேறு விஷயங்களை கற்று கொள்ளும் வாய்ப்பை நானும், ஆயிரக்கணக்கான கட்சியினரும் பெற்றுள்ளனர்” என்று தெரிவித்தார்.