Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய அரசியலமைப்பில் இருந்து சோசலிசம், மதசார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும்: அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து

கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள பாஜ தலைமையத்தில் “தி எமர்ஜென்சி டைரீஸ் : இயர்ஸ் தட் ஃபோர்ஜ் எ லீடர்” என்ற நூல் வௌியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அசாம் முதல்வர் ஹிமநத பிஸ்வா சர்மா , “இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இடம்பெற்றுள்ள சோசலிசம், மதசார்பின்மை ஆகியவை மேற்கத்திய கருத்துகள். இந்த வார்த்தைகள் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டன.

ஆனால் இவை இந்திய அரசியலமைப்பின் ஒருபகுதியாக இல்லை. நான் ஒரு தீவிர இந்து, நான் எப்படி மதசார்பற்றவனாக இருக்க முடியும்? ஒரு தீவிர முஸ்லிம் எப்படி மதசார்பற்றவராக இருக்க முடியும்? மதசார்பின்மை என்பது நடுநிலையாக இருப்பது என்பதல்ல, மாறாக அது நேர்மறையாக சீரமைக்கப்படுவது பற்றியது. எனவே இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து சோசலிசம், மதசார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும்” என தெரிவித்தார்.