புதுடெல்லி: தெலங்கானா மற்றும் சட்டீஸ்கர் எல்லையில் 21 நாள் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது 5 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காயமடைந்த வீரர்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நேரில் சந்தித்தார். அவர்களது உடல்நிலை குறித்து விசாரித்ததாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement

