Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நல்கொண்டாவில் குடும்ப பிரச்னையால் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

*போலீசார் பத்திரமாக மீட்டனர்

திருமலை : குடும்ப பிரச்னை காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை போலீசார் தடுத்து பத்திரமாக மீட்டனர். தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், மிரியாலகுடா நகரில் உள்ள சைதன்யா நகரைச் சேர்ந்தவர் ஒரு இளம் பெண். இவரது வீட்டில் கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனவேதனையடைந்த இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு செய்து கொள்ள அருகே தண்டவாள பகுதிக்கு சென்றார். இதனை கண்டதும் அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதனடிப்படையில், 2வது நகர காவல் நிலைய தலைமைக் காவலர் நாகராஜூ மற்றும் கான்ஸ்டபிள் தனஞ்சயா ஆகியோர் உடனடியாக தண்டவாளத்திற்கு விரைந்து சென்று தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை தடுத்து மீட்டு வந்தனர்.

அப்போது, ஜன்மபூமி எக்ஸ்பிரஸ் ரயில் அப்பகுதியை கடந்த சென்றது. அதற்குள் போலீசார் விரைந்து செயல்பட்டு இளம்பெண்ணை மீட்டதால் நொடி பொழுதில் அவர் காப்பாற்றப்பட்டார்.

இதையடுத்து, தற்கொலைக்கு முயற்சிப்பது தவறு என போலீசார் அறிவுரை கூறி, இளம்பெண்ணை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் சரியான நேரத்தில் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றியதற்காக நகர மக்கள் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.