2014-ல் வெறும் 248 கிமீ தான்; இன்றோ 1,200 கிமீ: மெட்ரோ நெட்வொர்க் விரிவாக்கம் குறித்து பிரதமர் பெருமிதம்
டெல்லி: நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவை வளர்ச்சியின் வேகத்தை, 2014-ஆம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தோடு பிரதமர் மோடி ஒப்பிட்டுள்ளார். இந்தியாவின் மெட்ரோ நெட்வொர்க் 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த வேகத்தில் தொடர்ந்து விரிவடைந்து இருந்தால், புனே போன்ற நகரங்களுக்கு மெட்ரோ வருவதற்கு எவ்வளவு காலம் ஆகி இருக்கும்? வருடங்கள் இல்லை பல தசாப்தங்கள் கூட ஆகியிருக்கலாம்.
2014 ஆம் ஆண்டில், இந்தியாவில் 5 நகரங்களில் வெறும் 248 கிமீ மெட்ரோ பாதை மட்டுமே இருந்தது. ஆனால் இன்று, 26 நகரங்களில் கிட்டத்தட்ட 1,200 கி.மீ மெட்ரோ பாதை இருக்கிறது. நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் மூலம் மெட்ரோ ரயிலில் தினமும் 1 கோடி பேர் பயணம் செய்கின்றனர்.
இந்த சாதனை குறைந்த போக்குவரத்து நேரம், அதிக குடும்ப நேரம், அதிக உற்பத்தி மற்றும் சிறந்த வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சியை குறிக்கிறது. நகர்ப்புற இந்தியாவுக்காக நாங்கள் வெளிப்படுத்தும் உழைப்பு மற்றும் மாற்றம் இது தான் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


