Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

1.6 லட்சம் இன்ஸ்டா அக்கவுண்ட்களை முடக்கிய மெட்டா நிறுவனம்! காரணம் என்ன?

டெல்லி: மெட்டா நிறுவனம் இந்தியாவில் சுமார் 1.6 லட்சம் (1,60,000) இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களை முடக்கியுள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து கடும் எச்சரிக்கையை பெற்ற சில் நாட்களிலேயே இந்தியாவில் கட்டண இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைப் பொருட்களை (CSAM) ஊக்குவிக்கப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மெட்டா நிறுவனம் பதிலளித்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான விளம்பரங்கள் எப்படி அனுமதிக்கப்பட்டன என்பது குறித்து விளக்கமளிக்க மெட்டா (Meta) நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு 7 நாட்கள் கெடு விதித்துள்ளது. இந்த நிலையில் தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சந்தேகத்திற்கிடமான லிங்க்ஸ்களை பகிர்ந்ததற்காக, கடந்த ஆறு மாதங்களில் சுமார் 1.6 லட்சம் இன்ஸ்டா அக்கவுண்ட்கள் மூடக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் கூறி இருக்கிறது.

குழந்தைகள் மீதான பாலியல் ரீதியிலான அத்துமீறல் தொடர்பான புகார்களைத் தாங்கள் "மிகவும் தீவிரமாக" எடுத்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள மெட்டா நிறுவனம், தங்கள் கொள்கைகளை மீறிய பல விளம்பரங்களையும், அக்கவுண்ட்களையும் ஏற்கனவே நீக்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ளது. தங்களின் மேம்பட்ட AI தொழில்நுட்பம் மூலம் குழந்தைகளைப் பாதிக்கும் சட்டவிரோத செயல்களோடு தொடர்புடைய லிங்க்ஸ்களைக் கண்டறிந்து அதை பகிர்ந்த இன்ஸ்டா அக்கவுண்ட்ஸ்களை முடக்கி இருப்பதாக நிறுவனம் கூறி உள்ளது.

குழந்தைகளை ஆபாசமாகச் சித்தரிக்கும் அல்லது பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் சட்டவிரோதமான பேஜ்களுக்கு பயனர்களை அழைத்துச் செல்லும் கன்டன்ட்ஸ்களுக்கு எதிராகத் தாங்கள் கடுமையான கொள்கைகளைக் கொண்டிருப்பதாகவும், அதை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதில் உறுதியுடன் இருப்பதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.