பல மாநிலங்களில் வாக்களிக்கிறார்கள் பாஜ, தேர்தல் ஆணையம் வெளிப்படையாக திருட்டு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி: பா.ஜவும், தேர்தல் ஆணையமும் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அரியானா, டெல்லி மற்றும் பீகார் தேர்தல்களில் ஒருவர் வாக்களித்ததாகக் கூறும் வீடியோ பதிவை ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு,’ பாஜவும் தேர்தல் ஆணையமும் வாக்கு திருட்டு நடத்துவதற்கு கூட்டாக செயல்படுகிறது. ஜனநாயகக் படுகொலை நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது. லட்சக்கணக்கான பாஜ உறுப்பினர்கள் வெளிப்படையாக பல்வேறு மாநிலங்களில் சுற்றித் திரிந்து வாக்களிக்கின்றனர். அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்படுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.
