Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகாராஷ்டிரா மாஜி அமைச்சர் கல்வீச்சில் படுகாயம்

மும்பை: சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சியை சேர்ந்தவர் அம்மாநில முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக். இவரது மகன் சலீல் தேஷ்முக் கடோல் சட்டமன்ற தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று முன்தினம் பிரசார கூட்டத்தில் பேசி விட்டு, இரவு சுமார் 8 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தார்.

நாக்பூர் மாவட்டம் பெல்பாட்டா அருகே சிலர் அவரது கார் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கார் கண்ணாடிகள் உடைந்து, காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த அனில் தேஷ்முக் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கு பாஜதான் காரணம் என்று தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.