Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மகாராஷ்டிராவில் அமலாக்கத்துறை ரெய்டு மாநகராட்சி அதிகாரி வீட்டில் ரூ.32 கோடி நகை, பணம்

மும்பை: சட்டவிரோத கட்டுமான வழக்கில் மகாராஷ்டிராவின் விரார் வசாய் மாநகராட்சி அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.31 கோடி மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு விரார் வசாய் மாநகராட்சியில் அரசு மற்றும் தனியார் நிலத்தில் சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டப்படுவதாக புகார்கள் எழுந்தனர். அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி பில்டர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பல நபர்கள் தலையீடு உள்ளது, பெரிய அளவில் பணபரிவர்த்தனை நடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்தது.

விசாரணையில் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பதற்கும், குப்பைகள் கொட்டுவதற்கும் ஒதுக்கப்பட்ட நிலத்தில் 41 சட்டவிரோத கட்டிடங்கள் கட்டப்பட்டது தெரிய வந்தது. மேலும் இந்த மோசடியில் மாநகராட்சி நகர திட்டமிடல் துணை இயக்குநர் ஒய்.எஸ்.ரெட்டிக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் ரெட்டிக்கு சொந்தமான நாலாசோபரா, வசாய், ஐதராபாத்த்தில் உள்ள 13 இடங்களில் நேற்று அமலாத்துறை சோதனை நடத்தினர் இந்த சோதனையில் ரூ.9.04 கோடி ரொக்கம், ரூ.23.25 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த மோசடியில் சீதாராம் குப்தா, அருண் குப்தா உள்ளிட்ட பலர் முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.