மும்பை: மும்பை பாலிஹில் பகுதியில் கங்கனாவுக்கு சொந்தமான பங்களா இருந்தது. இந்த பங்களா மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. அப்போது ஆட்சியில் இருந்த உத்தவ் தாக்கரே, இந்த கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து இடிப்பு பணிக்கு நீதிமன்றத்தில் கங்கனா தடை வாங்கினார். 2017ம் ஆண்டு இந்த பங்களாவை ரூ.20 கோடிக்கு வாங்கியிருந்தார் கங்கனா. இந்நிலையில் இதை ரூ.32 கோடிக்கு விற்றுள்ளார்.
அவரிடமிருந்து கோவையை சேர்ந்த தொழிலதிபர் சுவேதா என்பவர் வாங்கியுள்ளார். மொத்தம் 3,075 சதுர அடி கொண்ட இந்த பங்களாவில் நீச்சல் குளம், ஹோம் தியேட்டர், ஜிம் வசதிகள் உள்ளன. கங்கனா சில படங்களில் நடிக்க சம்பளம் வாங்காமல், லாபத்தில் பங்கு என்று ஒப்பந்தம் போட்டிருந்தார். அந்த படங்கள் அனைத்தும் படுதோல்வி அடைந்தன. இதனாலேயே தனது பங்களாவை அவர் விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

