ஹசாரிபாக்: ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் என்டிபிசி கெரேதாரி நிலக்கரி சுரங்கத்திட்டத்தின் துணை பொது மேலாளராக குமார் கவுரவ் நியமிக்கப்பட்டுள்ளார். கடம்காம்டாக் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பதா சவுக் அருகே வீட்டில் இருந்து நிலக்கரி சுரங்கத்திற்கு சென்ற குமார் கவுரவை(42) அடையாளம் தெரியாத மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
பீகார் மாநிலத்தின் நாளந்தாவை சேர்ந்த கவுரவ் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

