Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கடந்த ஜனவரியில் தொழில்துறை உற்பத்தி 5% அதிகரிப்பு

புதுடெல்லி: கடந்த ஜனவரி மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொழில்துறை உற்பத்தி 4.2 சதவீதம் அதிகரித்திருந்தது. இதுபோல், கடந்த ஆண்டு டிசம்பரில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 3.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இது 3.5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

தொழில்துறை உற்பத்தி புள்ளி அடிப்படையில் இந்த வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. ஜனவரியில் உற்பத்தி துறை வளர்ச்சி 5.5 சதவீதமாக உள்ளது. அதேநேரத்தில் சுரங்க துறையில் 4.4 சதவீதம் மட்டுமே உற்பத்தி உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் இது 6 சதவீதமாகியுள்ளது. மின் உற்பத்தி 2.4 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் தொழில்துறை உற்பத்தி 4.2 சதவீதம் உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில் இது 6 சதவீதமாக இருந்தது, என புள்ளியியல் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.