எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக ஏராளமானவர்கள் இடம்பெயர்ந்து வருகின்றார்கள். ஜம்முவின் உதம்பூர் முதல் டெல்லி வரையிலான வழித்தடத்தில் பயண தேவை அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 12 முன்பதிவு செய்யப்படாத மற்றும் 12 முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயில் காலை 10.45மணிக்கு ஜம்முவில் இருந்து டெல்லி புறப்பட்டது.
இதேபோல் 20 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் மதியம் 12.45மணிக்கும், 22 பெட்டிகளை கொண்ட மூன்றாவது ரயில் இரவு 7 மணிக்கும் ஜம்முவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச்சென்றது. ரயில்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தேவைப்பட்டால் உடனடியாக இயக்கப்படும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


