Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தானதால் பாக்.கிற்கு தண்ணீர் கொடுக்க தீவிர வேலை செய்யும் சீனா: அணை கட்டுமான பணிகள் வேகம்

புதுடெல்லி: சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் அணை கட்டுமான பணிகளை சீனா துரிதப்படுத்தியுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் 26 பேரை சுட்டுக் கொன்றதையடுத்து, பாகிஸ்தானுடன், போடப்பட்ட சிந்து நதி ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது. சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பரிதவிப்பான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் ஒரு பெரிய அணையை கட்டி வரும் சீனா அதற்கான பணிகளை விரைவுப்படுத்தி உள்ளது. வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் முகமது அணை கட்டப்பட்டு வருகிறது. இந்த அணை சீன உதவியுடன் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளை அடுத்த ஆண்டு திட்டமிட்டபடி நிறைவேற்றி முடிக்க சீனா தயாராகி வருகிறது.