இந்தியா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் உலகளவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுக்களான ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகங்கள் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவை அடங்கும். மும்பை தாக்குதல்களுடன் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்கள் (அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி மற்றும் தஹாவூர் ராணா பார்வையிட்ட குழுவின் முரிட்கே (பாகிஸ்தானின் பஞ்சாப்) ஆகியவை இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் அடங்கும். உளவுத்துறை கொடுத்த உரிய தகவல்கள் அடிப்படையில் இந்த இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா, தெஹ்ரா கலனில் உள்ள சர்ஜால், கோட்லியில் உள்ள மர்காஸ் அப்பாஸ் மற்றும் முசாபராபாத்தில் உள்ள சையத்னா பிலால் முகாம் (அனைத்தும் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழு) ஆகியவை துல்லியமான நடவடிக்கையில் தாக்கப்பட்ட இலக்குகளில் அடங்கும். முரிட்கேயில் உள்ள மர்காஸ் தைபா, பர்னாலாவில் உள்ள மர்காஸ் அஹ்லே ஹதீத் மற்றும் முசாபராபாத்தில் உள்ள ஷ்வாவாய் நல்லா முகாம் (அனைத்தும் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் முகாம்கள்) மற்றும் கோட்லியில் உள்ள மாகஸ் ரஹீல் ஷாஹித் மற்றும் சியால்கோட்டில் உள்ள மெஹ்மூனா ஜோயா (தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீனின் முகாம்கள் மற்றும் பயிற்சி மையங்கள்) ஆகியவையும் தாக்கப்பட்டன.
பாகிஸ்தானின் பஞ்சாபின் நரோவல் மாவட்டத்தில் உள்ள சர்ஜல் தெஹ்ரா கலனில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது முகாம் அப்துல் ரவூப் அஸ்கரால் கவனிக்கப்படுகிறது. பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் உள்ள ஷவாய் நல்லா முகாம், லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கியமான முகாம்களில் ஒன்றாகும். இது 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒரே நேரத்தில் 200-250 பயங்கரவாதிகளை தங்க வைக்கக்கூடிய இந்த முகாமுக்கு பாகிஸ்தான் ராணுவமும் ஐஎஸ்ஐயும் அடிக்கடி சென்று வருகின்றன. இந்த முகாம்களில் இருந்து பயங்கரவாதிகள் முக்கியமாக வடக்கு காஷ்மீருக்குள் ஊடுருவுகிறார்கள்.
முரிட்கேயில் உள்ள மர்காஸ் தைபா முகாம் லஷ்கர்-இ-தொய்பாவின் மிக முக்கியமான பயிற்சி மையங்களில் ஒன்றாகும். அங்கு ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டு, உடல் பயிற்சி மற்றும் இரண்டு வார கால போதனை பாடநெறி வழங்கப்படுகிறது. இந்த முகாமில் சுமார் 1000 பேர் சேர்க்கப்படுகிறார்கள். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயின் உத்தரவின் பேரில், கசாப் உட்பட 10 பயங்கரவாதிகளுக்கும் இந்த முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது.
பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுபனால்லா, ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி மற்றும் போதனைக்கான முக்கிய மையமாகும், மேலும் பயங்கரவாதக் குழுவின் செயல்பாட்டு தலைமையகமாகவும் செயல்படுகிறது. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கான திட்டமிடல் இந்த முகாமில் தான் நடந்தது. இந்த முகாமில் தான் சர்வதேச பயங்கரவாதியும் ஜெய்ஷ்-இ-முகமதுவின் நிறுவனருமான மசூத் அசார், அவரது சகோதரர் அஸ்கர் வீடுகள் உள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லியில் உள்ள மர்காஸ் அப்பாஸ் முகாம், அஸ்கரின் நெருங்கிய உதவியாளரான காரி ஜராரின் தலைமையில் செயல்படுகிறது. பூஞ்ச் மற்றும் ரஜோரியில் பயங்கரவாதிகளின் ஊடுருவலுக்கு இந்த முகாம் பயன்படுத்தப்படுகிறது. முசாபராபாத்தில் அமைந்துள்ள ஜெய்ஷ்-இ-முகமதுவின் மற்றொரு முகாமான மர்காஸ் சையத்னா பிலால், 50-100 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கறிது. மேலும் பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்பு சேவைக் குழு இந்த முகாமில் ஜெய்ஷ்-இ-முகமது கேடர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.
சியால்கோட்டில் உள்ள மெஹ்மூனா ஜோயா பயங்கரவாத முகாம் ஒரு சுகாதார மையம் பெயரில் நடக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முகாமில் உள்ள கோட்லியில் உள்ள மர்காஸ் ரஹீல் ஷாஹித், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுக்கு எ துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படுகிறது. பர்னாலாவில் அமைந்துள்ள மர்காஸ் அஹ்லே ஹதீஸ் முகாம் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது, இந்த முகாம் 100-150 பயங்கரவாதிகளை தங்க வைக்கும் திறன் கொண்டது.


