Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

புதிய வருமான வரி படிவங்கள் வெளியீடு

புதுடெல்லி: ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை ஈட்டும் தனி நபர்கள், நிறுவனங்கள் சமர்ப்பிப்பதற்கான 2025-26 கணக்கீட்டு ஆண்டுக்கான புதிய வருமான வரி படிவங்களை 1 மற்றும் 4 ஆகியவற்றை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை மாதச் சம்பளம், வீட்டு வாடகை, வட்டி போன்ற இதர வருமானங்கள், ஆண்டுக்கு ரூ.5,000 வரை விவசாயம் மூலம் வருவாய் ஈட்டும் தனிநபர்கள் ஈட்டும் தனி நபர்கள் சகஜ் எனப்படும் ஐடிஆர் 1 படிவம் தாக்கல் செய்யலாம்.

சுகம் எனப்படும் ஐடிஆர் 2 படிவம் தொழில் மற்றும் வணிகம் மேற்கொள்ளாத தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பத்தினருக்கானது. தற்போது நிதியாண்டில் நீண்டகால மூலதன ஆதாயமாக ரூ.1.25 லட்சம் ஈட்டுவோர் ஐடிஆர் 2க்கு பதிலாக ஐடிஆர் 1 தாக்கல் செய்யலாம்.  மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகம் செய்துள்ள புதிய ஐடிஆர் படிவங்கள், பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடு மூலம் நீண்ட கால மூலதன ஆதாயம் ஈட்டும் மாதச் சம்பளக்காரர்களுக்கு ஏற்றது.

ஐடிஆர் 4 படிவம் தொழில் மூலம் வருவாய் ஈட்டும் நபர்களுக்கானது. சமீபத்திய திருத்தங்களின்படி, வருமானவரிச் சட்டம் 112ஏயின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.25 லட்சத்துக்குள் நீண்டகால மூலதன ஆதாயம் பெற்ற மற்றும் மூலதன இழப்பு அல்லாத தனிநபர்கள் தங்களுக்கு ஏற்ற சகஜ் எனப்படும் ஐடிஆர் 1 , சுகம் எனப்படும் ஐடிஆர் 4 படிவங்களைப் பயன்படுத்தலாம். எளிதாக வருமான வரித்தாக்கல் செய்ய படிவங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.