Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐஐடி மாணவி கூட்டு பலாத்கார விவகாரம் மோடியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங். ஆர்ப்பாட்டம்

வாரணாசி: வாரணாசியில் ஐஐடி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து மோடியின் எம்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதி பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியாகும். இங்குள்ள பனாரஸ் இந்து பல்கலை கழகத்தை சேர்ந்த மாணவியை, கடந்த நவம்பர் 1ம் தேதி 3 மர்ம நபர்கள் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மாணவர்களின் தீவிர போராட்டம் காரணமாக, சம்பவம் நடந்து 1 மாதம் கழித்து மாணவியை பலாத்காரம் செய்த வாரணாசி பாஜ அலுவலக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் குணால் பாண்டே, செயற்குழு உறுப்பினர் அபிஷேக் சவுகான், இணைஒருங்கிணைப்பாளர் சஷாம் படேல் ஆகியோர் கடந்த ஞாயிறன்று(டிச.31) கைது செய்யப்பட்டனர். மாணவி பலாத்கார சம்பவத்தை கண்டித்து பனாரஸ் மற்றும் நகர பிரிவு காங்கிரசார், மோடியின் எம்பி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.