Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ரூ.50 கோடிக்கு நாய் வாங்கியவர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு : பிரபலமாவதற்காக பொய் வீடியோ எடுத்து பரப்பியது அம்பலம்

பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த 51 வயதான சதீஷ் என்பவர் உலகின் இந்தவகை நாய் இது ஒன்றே ஒன்றுதான். அதை நான் ரூ.50 கோடிக்கு வாங்கிவிட்டேன் என்று சதீஷ் பதிவிட்ட வீடியோ வைரலானது. பலரும் அந்த வீடியோவை ஆச்சரியமாகப் பார்த்தனர். அதனால் அந்த வீடியோ வைரலானதுடன் பேசுபொருளாகவும் மாறியது. இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சதீஷின் வீட்டில் ஆய்வு அமலாக்கத்துறை அதிகாரிகள், சதீஷ் ரூ.50 கோடிக்கு நாய் வாங்கியது குறித்த ஆவணங்களைத் தேடினர்.

ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அந்த நாயை காட்டச் சொல்லி கேட்டதற்கு, சதீஷ் மழுப்பியுள்ளார். தன்னை ஒரு பிரபலமான நாய் வளர்ப்பாளராக காட்டிக்கொள்வதற்காக, ஊடக நண்பர் ஒருவரின் உதவியுடன் சதீஷ் மோசடி வேலையில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. எனினும் அமலாக்கத்துறை அவரது வருவாய் மற்றும் செலவு விவரங்களை ஆய்வு செய்துவருகிறது.