புதுடெல்லி: பகுஜன் முக்தி கட்சியின் தேசிய தலைவர் பர்வேந்திர பிரதாப் சிங், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். கட்சியின் சட்டவிதிகள்படி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்’’ என வலியுறுத்தி இருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதி சிங் பிறப்பித்த உத்தரவில், ‘‘ அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்ட பிறகு, அதன் சட்டவிதிகளை பின்பற்றுகிறதா, உள்கட்சி தேர்தலை நடத்துகிறதா என்பதை கண்காணிக்க தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. உட்கட்சி தகராறுகளை தேர்தல் ஆணையத்தால் தீர்க்க முடியாது. பிரச்னைகள் இருந்தால், நீதிமன்றம் தீர்த்துக் கொள்ளலாம்’’ என கூறி உள்ளார்.
Advertisement


