புதுடெல்லி: பாகிஸ்தான் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ராஜஸ்தான் பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். இதையடுத்து இந்திய எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) வீரர்கள் அவரை கைது செய்தனர். பஹல்காம் தாக்குதல் நடந்த அடுத்த நாள் பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற பிஎஸ்எப் வீரர் பூர்ணம்குமார் ஷா என்பவரை பாகிஸ்தான் வீரர்கள் கைது செய்தனர். அவரை ஒப்படைக்க கோரி இந்தியா விடுத்த கோரிக்கைக்கு பாகிஸ்தான் இதுவரை பதிலளிக்கவில்லை. அதற்கு பதில் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
Advertisement
