புதுடெல்லி: ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை 2024ம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக் கொண்டது. இதுகுறித்த பரிந்துரை ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டும் இந்த விவகாரம் நிலுவையில் இருந்து வருகிறது. 5 நாள் வங்கி வேலையை அமல்படுத்துதல், செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தை வாபஸ் பெறுவது உள்பட 4 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி 11ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.
மேலும், 4-ம் நிலை மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டம் எங்களுக்கு ஏற்படையதல்ல. கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், செப்டம்பர் 28-ம் தேதியில் இருந்து 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். அக்டோபர் 26 முதல் காலவரையற்ற போராட்டம் நடக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



