Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெங்களூருவில் கன்னட சினிமா இயக்குநர் குருபிரசாத் தற்கொலை

பெங்களூரு: கன்னட திரைப்பட இயக்குநரும் நடிகருமான குருபிரசாத் பெங்களூருவில் நேற்று தற்கொலை செய்துகொண்டார். கன்னட சினிமாவில் 2006ம் ஆண்டு மாதா என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் குருபிரசாத். அதன்பின்னர் எட்டேலு மஞ்சுநாதா, டைரக்டர்ஸ் ஸ்பெஷல், எரடனே சாலா, ரங்கநாயகா ஆகிய திரைப்படங்களை குருபிரசாத் இயக்கினார். படம் இயக்குவது உட்பட பல திரைப்படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

அண்மையில் 2வது திருமணம் செய்துகொண்ட குருபிரசாத்துக்கு வயது 52. இந்நிலையில், பெங்களூரு மதநாயக்கனஹள்ளியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெங்களூரு மதநாயக்கனஹள்ளி அப்பார்ட்மென்ட்டில் குருபிரசாத் வசித்துவந்த நிலையில், அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குருபிரசாத் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இருந்தார்.

அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் தற்கொலை செய்து பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசாரின் விசாரணையில் இயக்குநர் குருபிரசாத் கடும் நிதி நெருக்கடியில் இருந்தது தெரியவந்தது. அவரது பல படங்கள் முடிக்கப்படாமல் பாதியில் நிற்பதும் தெரியவந்திருக்கிறது. கடும் நிதி நெருக்கடியில் இருந்துவந்த இயக்குநர் குருபிரசாத்தின் இயக்கத்தில் வெளியான கடைசி படமான ரங்கநாயகா படமும் தோல்வியைச் சந்தித்ததால் அவர் மன அழுத்தத்திலும் இருந்துள்ளார்.

அண்மையில் 2வது திருமணம் செய்துகொண்ட குருபிரசாத், திரைப்படங்களை இயக்கியதுடன், ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் இருந்துவந்தார். நிதி நெருக்கடி, மன அழுத்தம் ஆகிய பிரச்னையில் இருந்துவந்த குருபிரசாத் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். குருபிரசாத் தற்கொலை செய்துகொண்ட வீட்டில் 8 மாதங்களாக வசித்துவந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும், அவரது 2வது மனைவி பற்றியும் போலீசார் விசாரித்துவருகின்றனர்.